சோமாலிய காற்பந்தாட்ட மைதானத்தில் திடீரென வெடித்த குண்டு ; சிறுவர்கள் உட்பட 27 பேர் பலி

சோமாலியா நாட்டில் காற்பந்தாட்ட மைதானத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்ததை அடுத்து, சிறுவர்கள் உட்பட 27 பேர் பலியாகி உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சோமாலியா நாட்டில் காற்பந்தாட்ட மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதன் அருகிலுள்ள பகுதியில் கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது, அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது செயல் இழந்ததாக கருதப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய பீரங்கி குண்டு என்றும் தெரியவந்துள்ளது.

காற்பந்தாட்ட மைதானத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செயல் இழந்ததாக கருதப்பட்ட பழைய பீரங்கி குண்டை காற்பந்தாட்ட மைதானத்தில் புதைத்தது ஏன்..? என்ற கேள்வியை மக்கள் எழுப்பு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here