மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய RM6,000 முதல் RM7,000 வரை கட்டணமா? – 68 பேர் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் தலா RM6,000 முதல் RM7,000 வரை கட்டணம் வசூலிக்கும் ஒரு ஆட்கடத்தல் கும்பலின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,

கடந்த ஜூன் 14 அன்று மலேசிய குடிவரவுத் துறையினரால் காலை 3.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை 3 (Op Gelombang 3) இல், 10 முதல் 62 வயதுடைய மொத்தம் 68 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் அப்போதுதான் அண்டை நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் கிளாந்தானின் கோத்தா பாரு பஸ் டெர்மினலில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்று, அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

கைது செய்யப்பட்ட 68 வெளிநாட்டவர்களில் 24 பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாகவும், அதில் மியன்மார் (21), இந்தோனேசியா (10), வியட்நாம் (6), வங்காளதேசம் (3), இந்திய (26) மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

“அவர்கள் அனைவரும் அண்டை நாட்டிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலுக்கு ‘போக்குவரத்து செய்பவர்களாக’ செயல்பட்ட மூன்று உள்ளூர் ஆண்களையும் குடிநுழைவுத் துறை கைது செய்தது.

“இந்த டிரான்ஸ்போர்ட்டர், எல்லையில் இருந்து பேருந்து முனையத்திற்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் RM150 முதல் RM250 வரை ஊதியம் பெறுவதாகக் கண்டறியப்பட்டது.

விசாரணைக்கு உதவுவதற்காக வெளிநாட்டினரை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட சுமார் RM50,000 மதிப்புள்ள மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு குடிவரவு சட்டம் 1959/63 மற்றும் பாஸ்போர்ட் சட்டம் 1966 இன் படி விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here