சமூக சேவையாளருக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஆதரவற்ற நபர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அவற்றை நல்லடக்கம் செய்து வருகிறார்.

கடந்த 21 ஆண்டுகளாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். அது மட்டுமின்றி தொழு நோயாளிகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.

இதன் காரணமாக மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருது வழங்கியுள்ளன. கொரோனா காலத்திலும் இறந்தவர்களின் உடல்களை இவர் அடக்கம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது சேவையை அறிந்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது அறக்கட்டளை சார்பில் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறும் அவருக்கு ரஜினிகாந்த் ஊக்கமளித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here