பிரபல நடிகை கல் கடோட் மீண்டும் Wonder Woman திரைப்படத்தில் நடிக்கக்கூடும்!

பிரபல நடிகை கல் கடோட் (Gal Gadot), Wonder Woman திரைப்படத்தின் கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்று நடிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டிலிருந்து அவர் Wonder Woman கதாபாத்திரத்தை ஏற்றுநடித்து வருகிறார்.

“திரைக்குப் பின்னால் பல ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தகுந்த நேரத்தில் விவரங்களை அறிவிப்போம்” என்று கல் கடோட் தெரிவித்தார்.

வரும் வாய்ப்புகளை நிராகரிக்கவில்லை என்று கூறிய அவர், அலசி ஆராய்ந்த பின்னரே எந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பதை முடிவுசெய்வதாக, Netflix அன்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கல் கடோட் அந்தத் தகவலை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here