ஒருவரால் எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க முடியுமா?

நடிகர் வடிவேலு கூறுவதுபோல் ஒருவரால் சும்மா இருக்க முடியுமா? உண்மையிலே உங்களால் எதுவுமே செய்யாமல் சும்மா உட்காந்து இருக்க முடியுமா? முடியும் என்கிறீர்களா? ஆனால் முடியாது என்கிறது ஆய்வு முடிவுகள்.அது குறித்து இங்கே பார்க்கலாம். பொதுவாகவே, நாம் எதுவும் செய்யாமல், சும்மா இருப்பதைப்பற்றி கனவு காண்போம். ஆனால், எதுவுமே செய்யாமல், எங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பிடித்த தொடர்களை டிவியில் பார்ப்பது, பிடித்த வீடியோ கேம்களை விளையாடுதே முடியாத காரியம் தான் என்று உணர்த்தியது கொரோனா காலம்.

உண்மையில், இது போன்ற ஒரு நேரம் கிடைத்த போது, வீட்டுக்குள்ளேயே நாம் நம் வாழ்க்கையை கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய முடியவில்லை என்பது தான், ஒவ்வொரு மனிதனும் எப்போதும் சோம்பேறியாக இருக்க முடியாது என உளவியல் ஆதாரமாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைகழகம் ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. அதில் சிலர் ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்பது, 15 நிமிடங்கள், எதுவும் செய்யாமல் “சும்மா இருக்க வேண்டும்”என்பது தான். அதை கண்காணிக்கவும், அவர்களை திசை திருப்பவும், அவர்களது கால்களில் மின்முனைகள் பொருத்தப்பட்டன. அவர்களுக்கு ஒரு இயந்திரமும் காட்டப்பட்டது. அந்த இயந்திரத்தில் இருக்கும் பட்டனை அழுத்தினால், அவர்களின் கால்களில் பொறுத்தப்பட்டு உள்ள மின்முனைகளின் மூலம் அவர்களுக்கு ஷாக் அடிக்கும்.

எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என்று கூறி உள்ளே அனுப்பினால், அந்த கருவி என்ன செய்யும், எப்படி ஷாக் அடிக்கிறது என்று பார்க்க உத்தேசித்து அந்த கருவியை தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்கள். அவர்களால் ஒரு 15 நிமிடம் கூட எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்றவர்களில் 71 சதவித ஆண்களும், 25 சதவிதம் பெண்களும் ஒருமுறையேனும், அந்த கருவியை பயன்படுத்தி ஷாக் வாங்கி உள்ளார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த ஆராய்ச்சியில் பங்குபெற்ற ஒருவர், 15 நிமிடங்களில் 190 முறை அந்த கருவியை பயன்படுத்தி இருக்கிறார். அப்படி என்றால் 190 முறை தனக்கு தான் ஷாக் வைத்து கொண்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here