கடந்த ஆண்டு RM101.9 மில்லியன் மதிப்புள்ள பறிமுதல் சொத்துக்கள் பதிவு – MMEA

குவாந்தான்:

கடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக RM101.9 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்களை பதிவு செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய 1,200 பேரையும் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பு (MMEA) கைதுசெய்துள்ளது.

குறிப்பாக 1,81,000 சோதனை மற்றும் 43,000 தேடல்கள் போன்ற MMEA யின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் சிறப்பாக பணியாற்றியதாக அதன் இயக்குநர் ஜெனரல் கடல்சார் அட்மிரல் டத்தோ ஹமீட் முகமட் அமின் கூறினார்.

“நாட்டின் நீர்நிலைகளை பாதுகாப்பது MMEA யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் மலேசிய கடல்சார் மண்டலத்தில் இருக்கும் போது அவர்கள் பாதுகாப்பாகஇருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம் “.

“எங்களுடைய இந்த கடல் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மீன்வளம் போன்ற பல முக்கிய வளங்களைக் கொண்டுள்ளது, மேலும் எங்களது ரோந்துப் பணியின் நோக்கம் மக்களுக்கு நல்வாழ்வை உறுதி செய்வதோடு சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் உறுதி செய்கிறது” என்று, சுல்தான் அஹ்மட் ஷா கடல்சார் அகாடமியில் (AMSAS) இன்று உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தலைமையில் நடைபெற்ற MMEA 19வது ஆண்டு விழாவிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here