மனைவியை கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு

கங்கார்:

டந்த மாதம் துவாங்கு பௌசியா மருத்துவமனையில் தாதியாக பணியாற்றி வரும் அவரது மனைவியை கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட, இந்தேரா சைலன் முகமட் , 38, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் சித்தி நோர் ஹலிசா முஹமட் அலி முன் வாசிக்கப்பட்ட பிறகு, அதைப் புரிந்து கொண்டதாக அவர் தலையசைத்தார்.

கொலைக்குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 6.55 மணி வரை அராவ், பத்து 3/4 ஜாலான் பாடாங் நியுவில் உள்ள ஒரு வீட்டில் முனிரா அபு பக்கர் என அழைக்கப்படும் அவரது மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டது . மேலும் இந்த வழக்கை நவம்பர் 17-ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் ஒருவர் அவரது வீட்டில், இடது மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் இறந்து கிடந்தார் என்று ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here