ஹஜ்ஜுப் பெருநாள்: பெர்லிஸில் 1,075 விலங்குகள் பலியிடுவதற்கு அனுமதி

கங்கர்:

இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளுடன் இணைந்து பலியிடும் சடங்குக்காக பெர்லிஸ் மாநில கால்நடை சேவைகள் துறை மொத்தம் 1,075 விலங்குகளை பலியிட அனுமதிகளை வழங்கியது.

மாடு மற்றும் எருமைகளை பலியிடுவதற்கு மொத்தம் 791 அனுமதிகள் (PSL) வழங்கப்பட்டதாக மாநில கால்நடை சேவைகள் துறை, துணை இயக்குநர், டாக்டர். மாடிஹா முஹமட் ஜின் கூறினார்.

ஆடுகள் பலியிடுவதற்காக 284 அனுமதிகள் வழங்கப்பட்டன, அவை மசூதிகள், சூராக்கள் அல்லது வழிபாடு நடத்தப்படும் எந்த இடத்திலும் இறைச்சிக் கூடங்களுக்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

“அது தவிர, ஜெஜாவியில் உள்ள திணைக்கள இறைச்சிக் கூடம் மற்றும் நியமிக்கப்பட்ட தனியார் இறைச்சிக் கூடங்களிலும் பலியிடும் சடங்கு நடக்கிறது.

பெர்லிஸ் மாநில கால்நடை சேவைகள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நடத்தப்படும் பலியிடும் நடவடிக்கைகளை தமது துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.

“இந்தக் கண்காணிப்பின் நோக்கம் பலியிடும் நடவடிக்கைகள் மிகவும் ஒழுங்காகவும் சுத்தமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவேயாகும்.

தியாக திருநாள் வழிபாட்டின் போது விலங்குகளின் நலனைக் கருத்தில் கொள்வதோடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பலியிடப்பட்ட இறைச்சியால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here