மத்திய அரசின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்- துணை நிதி அமைச்சர்

மத்திய அரசின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) ரிங்கிட்டுக்கும் அதிகமாக உள்ளது என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

கணக்காளர் நாயகம் திணைக்களம் மற்றும் சொத்து மதிப்பீடு மற்றும்  திணைக்களத்தின் (JPPH) மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை 2013 முதல் 2022 வரையான 10 வருட காலப்பகுதியில் செய்யப்பட்ட அரசாங்க நிலம் மற்றும் கட்டிடங்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

மேலும் வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் உட்பட ஏனைய சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படாமல் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கத்தின் சொத்து மதிப்பு இன்னும் கணக்கிடும் செயல்முறையில் உள்ளதால், அது தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மஸ்லான் கூறினார். 

அரசாங்க நிலம் மற்றும் கட்டிடங்களை இந்தச் சொத்து மதிப்பின் கணக்கெடுப்பு உள்ளடக்கியுள்ளது. 

இந்நிலையில் , இது ஆலை மற்றும் இயந்திரங்கள் போன்ற பிற சொத்துக்களை உள்ளடக்கவில்லை.

அத்தொடு இதுவரை மதிப்பிடப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதால், இவ்வாண்டு 3,000 கோடி ரிங்கிட் அதிகரிப்புடன் மத்திய அரசாங்க சொத்துக்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அஹ்மட் மஸ்லான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here