சட்டமன்றத் தேர்தல்; 36 இடங்களில் கெராக்கான் போட்டியிடும்

‎கோலாலம்பூர்: ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் 36 இடங்களில் கெராக்கான் போட்டியிடுகிறது.

கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய், தெரெங்கானு மற்றும் கிளந்தானில் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என்றார். சிலாங்கூரில் எட்டு இடங்களிலும், கெடாவில் மூன்று இடங்களிலும், நெகிரி செம்பிலானில் ஆறு இடங்களிலும், பினாங்கில் 19 இடங்களிலும் கெராக்கான் 36 தொகுதிகளில் போட்டியிடும்.

இங்குள்ள மெனாரா பிஜிஆர்எம்மில் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதையும் உறுதி செய்த அவர், எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதைத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் தேர்தலில் கெராக்கான் தலைவராக தனது பதவியை பாதுகாப்பேன் என்று லாவ் கூறினார்.

கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங் மற்றும் தெரெங்கானு உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து நான் பரிந்துரைகளைப் பெற்றுள்ளேன்.

ஜூன் 29 அன்று, முன்னாள் கெராக்கான் பொதுச் செயலாளர் டத்தோ லியாங் டெக் மெங், கட்சியின் வரவிருக்கும் தேர்தலில் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

கோலாலம்பூர் கெராக்கான் தலைவர் லாவ் ஹோய் கியோங் மற்றும் மலாக்கா கெராக்கான் தலைவர் மைக்கேல் கான் உட்பட மேலும் இரண்டு போட்டியாளர்களும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here