இந்தியாவின் மூன் மிஷன் எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கும் நிலையில் இதற்கு முன்பாக, நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகள் எவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
1959- ஆம் ஆண்டு அப்போது சோவியத் ரஷ்யா என்ற அழைக்கப்பட்ட ரஷ்யா முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது.
இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். பின்னர் 1966- ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் ஒரு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா. அதற்கு லூனார் 16 என பெயரிடப்பட்டது. லூனார் 16 விண்கலம் மென்மையாக தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷ்யா 23 முறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது.
6 விண்வெளி திட்டங்கள் மூலம் 12 பேரை நிலவுக்கு அனுப்பிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. 1969- ஆம் ஆண்டு அப்போலோ 2 மூலம், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டரினை நிலவுக்கு அனுப்பியது.
அப்போலோ திட்டங்கள் மூலம் 1969 முதல் 1972 – ஆம் ஆண்டு வரை 6 முறை நிலவுக்கு அமெரிக்கர்கள் சென்றுள்ளனர். அதில் அப்போலோ 13 மட்டுமே தோல்வியடைந்தது.
சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கமாக உள்ளது. 2019- ஆம் டிசம்பரில், “யுடு” ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய மூன்றாவது நாடாக சீனா ஆனது.
மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு வாக்கில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்யும் பணியில் இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது.





















