நெகிரி செம்பிலானில் MyLesen B2 திட்டத்தின் கீழ் 756 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உரிமம் பெற்றனர் -லோக்

MyLesen B2 திட்டத்தின் நெகிரி செம்பிலானில் உள்ள ஏழு மாவட்டங்களில் மொத்தம் 756 பெறுநர்கள் பயனடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோகே சியோவ் ஃபூக் தெரிவித்தார்.

மொத்தப் பெறுநர்களில் 363 பேர் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

“வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை, குறிப்பாக கிராமப்புற சமூகங்களில் விரிவுபடுத்துவதற்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் B2 உரிமம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றுமை அரசாங்கம் புரிந்துகொள்கிறது.

“வழக்கமாக விண்ணப்பதாரர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வேண்டியது அவசியம், அத்தோடு போக்குவரத்து தொடர்பான படிப்புகள் மற்றும் எழுத்துத் தேர்வுகளை ஏற்பாடு செய்வதற்காக, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு வர வேண்டும் ,” ஆனால் MyLesen B2 திட்டத்தின் கீழ் இலகுவாக உரிமத்தை பெற்றுக் தருவதற்கான அரசாங்கத்தின் முயற்சியே இது என்று, இன்று டேவான் ஓராங் திட்டியில் மாநில அளவிலான தொடக்க விழாவில் பேசும் போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here