ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்யும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடந்தது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன.
வழக்கமான ஆன்மிக தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் அவர், இந்த முறை இயற்கை அழகு கொஞ்சும் மாலத்தீவின் அழகில் திளைக்க சென்றிருக்கிறார். சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் ஓய்வு எடுக்க அடிக்கடி மாலத்தீவுக்கு பறப்பது வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.