திங்கட்கிழமை வரை திரெங்கானு, கிளாந்தான் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

வரும் திங்கட்கிழமை (நவம்பர் 20) வரை திரெங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய பகுதிகளுக்கு கடுமையான கனமழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று முதல் திராங்கானு, கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மச்சோங், பாசிர் பூத்தே, குவாலா கிராய் ஆகிய பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஆறு மணி நேரத்திற்குள் 60 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் கடுமையான தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என்று அதன் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கிளாந்தான், கெடா, பேராக், பகாங் மற்றும் சபா ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here