22 பேருடன் பயணித்த விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலி

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 154 ஆவது கிலோமீட்டரில், ஏற்பட்ட விபத்தில், விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 1.09 மணிக்கு 22 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதாக, தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக புக்கிட் கம்பீர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் ஃபரிசான் மொக்தார் கூறினார்.

உடனே புக்கிட் கம்பீர் தீயணைப்பு நிலையத்திலிருந்து 16 பேர் கொண்ட குழு மற்றும் நான்கு இயந்திரங்களுடன் தாங்காக் தீயணைப்பு நிலையத்தினரின் உதவியோடு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட தகவலின் அடிப்படையில், பேருந்து வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணித்ததாக அவர் கூறினார்.

“விபத்தின் விளைவாக, பேருந்து ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார், மேலும் அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

பேருந்தில் பயணம் செய்த இரண்டு ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட எட்டு பயணிகள் லேசான காயம் அடைந்தனர், மற்ற பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்,” என்று அவர் கூறினார்.

காயமடைந்த பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here