நெ.செம்பிலானின் அருள்குமார், குணசேகரன், வீரப்பன் உட்பட 11 வேட்பாளர்கள் -DAP

அடுத்த மாதம் நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் தேர்தலில் அருள்குமார், குணசேகரன், வீரப்பன் உட்பட 11 வேட்பாளர்களின் பெயர்களை DAP நேற்று இரவு அறிவித்தது.

நேற்று இரவு வேட்பாளர்களை DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக், பின்வரும் தொகுதிகளுக்கான வேட்ப்பாளர்களை அறிவித்தார்.

N01 சென்னா – அந்தோனி லோக் (DAP)

N08 பாஹூ – தியோ கோக் சியோங் (DAP)

N10 நீலாய் – ஜே. அருள் குமார் (DAP)

N11 லோபாக் – செவ் சே யோங் (DAP)

N12 தேமியாங் -ங் சின் டிசாய் (DAP)

N21 புக்கிட் கெபயாங் – நிக்கோல் டான் (DAP)

N22 ரஹாங் – டெஸ்மண்ட் சியான் மியாவ் காங் (DAP)

N23 மாம்பாவ் – யாப் யூ வெங் (DAP)

N24 சிரம்பான் ஜெயா – P. குணசேகரன் (DAP)

N30 லுகூட் – சூ கென் ஹ்வா (DAP)

N36 ரேபா – எஸ். வீரப்பன் (DAP)

மேலும் பேசிய ஆவர் “நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2018 இல் பக்காத்தான் ஹராப்பான் (PH) வெற்றி பெற்றது. நான் நெகிரி செம்பிலானை பூர்வீகமாகக் கொண்டவன், இங்கு வளர்ந்தவன், எனது அரசியல் வாழ்க்கையை நான் இங்கு தொடங்கினேன், எனவே நிச்சயமாக நெகிரி செம்பிலான் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான மாநிலம் என்றார்.

அத்தோடு (DAP) நான்கு மாநிலங்களில் மட்டுமே போட்டியிடும் என்றும், நாளை சிலாங்கூரில் போட்டியிடவுள்ள அதன் வேட்பாளர்களை அறிவிக்கும் என்றும், பினாங்கு மற்றும் கெடாவில் முறையே செவ்வாய்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்த தேர்தலில் DAP வேட்பாளர்கள், அல்லது அமானா, அல்லது கேடிலான் என நாம் தனித்தனியாக போட்டியிடவில்லை, நாங்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி, நாங்கள் அனைவரும் PH சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here