6 மாநிலத் தேர்தலில் போட்டியிட ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 512 வேட்பாளர்கள்

சனிக்கிழமை (ஜூலை 29) வேட்புமனுத் தினத்திற்கு முன்னதாக ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 512 வேட்பாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் கெடா, கிளந்தான், தெரெங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய 245 மாநிலத் தொகுதிகளுக்கு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் நாளில் தேர்தல் ஆணையம் அவர்களின் வேட்புமனுவை அங்கீகரித்தவுடன் மட்டுமே வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள். இதுவரை அறிவிக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி 245 தொகுதிகளில் 243 இடங்களில் பெரிக்காத்தான் நேஷனலுடன் மோத உள்ளது.

நெகிரி செம்பிலானில் உள்ள ஜெராம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய  தொகுதிகளில் பெரிக்காத்தான் இன்னும் யாரை களமிறக்குகிறது என்பதை அடையாளம் காணவில்லை. மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஒரே பாரிசான் கூறு கட்சியான அம்னோ 108 வேட்பாளர்களை அறிவித்தது.

பக்காத்தான் 137 வேட்பாளர்களை பெயரிட்டுள்ளது. இதில் கெஅடிலானில் இருந்து 59 பேர், ஜசெகவில் இருந்து 47 பேர் மற்றும் அமானாவில் இருந்து 31 பேர் உள்ளனர். PAS (127), பெர்சத்து (79), மற்றும் கெராக்கான் (37) ஆகிய 243 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள பெரிக்காத்தானுக்கு எதிராக அவர்கள் போட்டியிடுவார்கள். இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ள மற்ற கட்சிகள் மூடா 20 வேட்பாளர்களையும், பிஎஸ்எம் நான்கு வேட்பாளர்களையும் களம் இறங்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here