இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் வைக்கப்பட வேண்டும்

  • சிலாங்கூர் அரசு இந்தியர்களின் நலன்களைத் தற்காக்கும்
  • ஏமாந்தது போதும் இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்
  • இந்தியர்களுக்குப் பயன்தரும் கொள்கைகள் அமல்படுத்தப்படும்

(பி.ஆர். ராஜன் – எஸ். வெங்கடேஷ்)

லேசிய இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தனித் தீவாகக் கருதப்படக்கூடாது. சிறுபான்மை என்ற பெயரில் அவர்கள் ஓரங் கட்டப்படவும் கூடாது. அவர்களின் சமூகவியல், பொருளாதாரம், கல்வி ஆகியவற் றில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு சமச்சீரான வாய்ப்புகள் வழங்கப்பட வேண் டும். இதனை பெரிக்காத்தான் நேஷனல் செய்து முடிக்கும் என்று அதன் சிலாங் கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

வரும் சட்டமன்றத் தேர் தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரிக் காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் அமைக்குமாயின் இந்தியர்களின் நலன்கள் அனைத்து ரீதியிலும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுநாள் வரை ஏமாந்தது போதும். இந்திய சமுதாயம் விழித்துக்கொள்ள வேண் டிய காலம் கனிந்துவிட்டது. சரியான ஒரு தலைமைத்துவம் இன்றி இம்மாநிலத் தில் வாழும் இந்தியர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என்று மக்கள் ஓசையுடனான ஒரு பிரத்தியேக நேர் காணலின்போது அஸ்மின்அலி குறிப்பிட்டார்.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெற விருக் கும் மாநில சட்டமன் றத் தேர்தலில் இந்தியர் கள் விவேகத்துடன் வாக்களிக்க வேண் டும். இந்தியர்களின் எதிர்காலம் இந்தி யர்க ளிடமே இருக்கி றது. தங்களது சொந்த எதிர் காலத்தை அவர்கள்தாம் முடிவுசெய்ய வேண்டும். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு இந்தியர்கள் ஒரு வாய்ப்பு தந்தால் இந்த மாநிலத்தில் அவர்கள் சமமாக நடத்தப்படுவர் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தியர்களின் சமூகவியல், பொருளாதாரம், கல்வி ஆகிய விவகாரங்களுக்கு இதுவரை ஒரு சரியான – தெளிவான முன்னேற்றங்கள் இன்றி அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். வாய்ப்புகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்குப் பயன்தரக்கூடிய எந்தவொரு திட்டங்களும் வாய்ப்புகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

கல்வியே பிரதானம்

இந்தியர்களின் மிகமுக்கியப் பிரச்சினையாக இருப்பது கல்வி. இதுவோர் அடிப் படையான விவகாரம். தமிழ்ப்பள்ளிகளில் அதன் அடிப்படை வசதிகளும் கட் டமைப்புகளும் இன்றளவும் முறையாக இருக்கவில்லை. எல்லாவற்றிலும் பற்றாக் குறையும் பிரச்சினைகளுமே விஞ்சி நிற்கின்றன. தரமான போதனா முறைக ளிலும் குறைபாடுகள் உள்ளன. ஆசிரியர்களுக்கு நிறைவான பயிற்சிகளும் இல்லை.

இவை யாவும் சரிசெய்யப்பட வேண்டும். தொழில்நுட்ப யுகத்தில் இருக்கின்ற நாம் அடிப்படைக் கல்வியில் இவ்வளவு பற்றாக்குறைகளை எதிர்நோக்கக்கூடாது. ஆரம்பம் சரியில்லை என்றால் முடிவும் சரியாக இருக்காது என்பதை இந்திய சமுதாயம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மூன்றாந்தரப் பிரஜைகள் அல்ல

சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் இந்திய சமுதாயம் இன்னமும் மூன்றாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். உண்மை நிலையில் பொருளாதார ரீதியில் இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் வைக்கப்பட்டு அவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும். உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சமச்சீரான வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் இந்தியர்களின் பொருளாதாரம் தானாகவே ஓர் உயர்வை எட்டும் என்று டத்தோஸ்ரீ அஸ்மின் கூறினார்.

அதேபோன்று சிறு – நடுத்தர தொழில்முனைவோர் (SME) வாய்ப்புகளிலும் இந்தியர்க ளுக்குச் சமமான இடம் தரப்பட வேண்டும். அனைத்து இனங் களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு களை பெரிக்காத்தான் நேஷனல் சமமாகப் பங்கிட்டுத் தரும். பிர தான தொழில்துறைக ளுக்கு உப விநியோகஸ்தர்களாகவும் இந்தியர்கள் விளங்குவதற்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும்.

தரமான கல்வி – உறுதியான வேலை வாய்ப்பு

நடப்புச் சுழ்நிலையில் தரமான கல்வி – உறுதியான வேலை வாய்ப்புகளில் இந்தியர்கள் விடுபட்டிருக்கின்றனர். சிலாங்கூர் மாநிலம் வலுமிக்க பொருளாதார முனையமாக உருவாக்கப்படும். இதில் இந்தியர்களும் ஓர் அங்கமாக இருப்பர். தரமான கல்வியோடு உறுதியான வேலை வாய்ப்புகளை வழங்கினால் மாநிலத் தில் உள்ள இந்தியர்களின் கல்வி, பொருளாதார அந்தஸ்து மிக உயர்ந்த நிலையை எட்டும்.

எதிலும் பற்றாக் குறை, ஒதுக்கல் என்ற கூப்பாடுகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைக்கப்படும். இதனை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை சிலாங்கூர் மாநில இந்தியர்கள் குறிப்பாக வாக்காளர்கள் திட்டவட்டமாக நம்ப வேண்டும்.

அதே சமயத்தில் சிலாங்கூரை முதல்நிலை பொருளாதார முனையமாக மாற்று வதற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும். உலகத் தரத்திலான முதலீடுகளை இந்த மாநிலத்திற்குக் கொண்டுவரும்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்ப தில் சிலாங்கூர் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஜோகூர் முதல் நிலை யிலும் கூட்டரசுப் பிரதேசம் 2ஆவது நிலையிலும் உள்ளன. நான் இந்த மாநிலத் தின் மந்திரி பெசாராக இருந்த கால கட்டத்தில் சிலாங்கூர் முதல்நிலை வகித்தது. உயர்தர முதலீடுகளைக் கொண்டுவந்தேன் என்று அஸ்மின் அலி கூறினார்.

மக்கள் அல்லல்படுகின்றனர்

மத்திய அரசாங்கம் ஓர் இலக்கும் தூரநோக்குப் பார்வையும் இல்லாத ஓர் அரசாங் கமாகவே விளங்குகிறது. ஓர் ஆக்கப்பூர்வமான தலைமைத்துவம் இலலை. மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பப்படுகின்றனர். இனத்தையும் சமயத்தையும் வைத்து அரசியல் நடத்துகின்றனர். ரிங்கிட் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துவருவ தால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வாங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

விலைவாசிகள் விண்ணைமுட்டும் அளவுக்கு உள்ளன. ஒவ்வொரு பொருளும் சராசரி 20 முதல் 30 விழுக்காடு வரை உயர்வு கண்டிருக்கின்றது. மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களின் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும். இயல்பான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்ப வேண்டும். விலைவாசி அதிகரிப்பால் ஏற்படும் துன்பங்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இதற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஒரு தெளிவான கொள்கையைக் கொண் டிருக்கிறது. வாய்ப்பு தரப்பட்டால் இதனை நிறைவேற்றிக் காட்டுவோம். மக்களை நிம்மதியாக வாழ வைப்போம். டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்தபோது இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றுமை அரசாங்கம் மக்களைக் காப்பாற்றுவதற்குப் பொருட்களின் விலை யைக் குறைப்பதற்கு ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்தது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதற்குத் தலைமையேற்றிருந்தார். முதல் கூட்டத்தை நடத்தி இரண்டு வாரங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார். இப்போது 7 மாதங்கள் கடந்துவிட்டன. எந்தத் திட்டமும் இல்லை. மக்களின் துன்பமும் துடைக்கப்படவில்லை.

பெரிக்காத்தான் நேஷனல் பல இனக் கட்சி

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஒரு பல இனக் கட்சியாகும். மலேசிய இந்தியர்கள் அதனை மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கட்சியில் ஓர் அங்கமாக உள்ள பெர்சத்து இந்தியர் களுக்கும் அதன் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. அவர்கள் இதில் உறுப்பி னர்களாகச் சேரலாம்.

இந்தத் திட்டத்தை நான்தான் வழிமொழிந்து இந்தியர்களும் இதில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன். முஹிடின் இதற்கு இணக்கம் தெரிவித்து இந்தியர்களையும் எங்களோடு இணைத்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் அனைவரும் மலேசியர்களாக வாழ வேண்டும். நான் மந்திரி பெசாராக இருந்த காலத்தில் சிலாங்கூர் மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய கொள்கை களை நிறைய வகுத்து அமல்படுத்தினேன். நான் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இருந்த கால கட்டத்தில்தான் கடந்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 51 தொகுதிகளை அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் வெல்ல முடிந்தது.

வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து இன வழி பாட்டுத்தலங்களும் பாதுகாக் கப்பட வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தை பாஸ் கட்சியுடன் இணைந்து பக்காத் தான் ஹராப்பான் ஆட்சி செய்தபோது ஓர் இந்து ஆலயம்கூட உடைக்கப்பட வில்லை. இந்துக் களின் சமய சம்பிரதாயங்களை நாங்கள் மதித்தோம். ஓர் ஆலயத்தை இடமாற்றுவதற்கு முன் மலேசிய இந்து சங்கத்தை அழைத்து அது குறித்து விளக்கம் அளித்து தெளிவும் பெற்றோம். மேலும் யாகங்கள் வளர்க்கப் பட்டு இடமாற்றத்திற்கு வழிசெய்தோம்.

200 குடும்பங்களுக்கு நிலப்பட்டா

பத்துகேவ்ஸில் உள்ள இந்தியன் செட்டில்மென்ட் குடியிருப்புப் பகுதியில் கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் நலப்பட்டாவுக்காக 60 ஆண்டுகள் போராடிக் கொண்டிருந்தன. எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போதைய அவர்களின் மக்கள் பிரதிநிதி மஇகாவைச் சேர்ந்த ஓர் இந்தியர். அவர் எதையும் செய்யவில்லை. ஆனால் நான் சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றவுடன் முதல் வேலையாக அந்த 200 குடும் பங்களுக்கும் நிலப்பட்டா வழங்கியதோடு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தந்தேன்.

இன, மத பேதமின்றி அனைத்து இனத்தவர்களும் சிலாங்கூர் மக்கள் என்ற ஒரே பார்வையில் சரிசமமாக நடத்தப்பட்ட ஒரு பொற்காலமும் இருந்தது. இந்தப் பொற்காலம் மீண்டும் மலர வேண்டும் என்றால் இந்தியர்கள் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் நன்கு சிந்தித்து விவேகமான தீர்ப்பை வழங்க வேண்டும்.

அதேசமயம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பிரமாண்ட பலநோக்கு மண்டபத் துடன் கூடிய அதிநவீன பள்ளிக் கட்டடத்தைக் கட்டித் தந்த பெருமையும் அன்றைய சிலாங்கூர் அரசுக்கு உண்டு. அதனைச் செய்து முடித்தது நான். நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு முன்னுதாரணப் பள்ளியாக இந்தப் பள்ளியும் அதன் நவீன மண்டபமும் விளங்குகிறது. இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சரித்திரம்.

குண்டர் கும்பல் – வேலையின்மை

சிலாங்கூர் மாநில இந்தியர்கள் இனியும் சிறுபான்மையினர் என்று ஓரங்கட்டப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் இந்தச் சமுதாயத்தில் குண்டர் கும்பல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வேலை இல்லாத் திண்டாட்டம் என்ற கூப்பாட்டிற்கும் வழி இருக்காது.

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்த லில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு சிலாங்கூர் இந்தியர்கள் ஒரு வாய்ப் பைத் தந்தால் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மலர்ச்சியைக் காண முடியும். இதனை நான் உறுதிசெய்வேன். இதுவே என்னுடைய வாக்குறுதி என்று அஸ்மின் அலி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here