KLIA பிரதான முனையத்தின் குப்பை தொட்டியில் ஏற்பட்ட தீ

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) மூன்றாவது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிக்கு அருகில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) காலை தீ விபத்து ஏற்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறுகையில், காலை 8.30 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் ஒரு அதிகாரியும் 12 பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, அப்பகுதியில் கடும் புகை மூட்டமாக இருந்தது. சோதனை செய்ததில், பிரதான முனைய கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குப்பை தொட்டியில் சில குப்பைகள் தீப்பிடித்ததை நாங்கள் கண்டுபிடித்தோம்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.காலை 9.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 10.31 மணிக்கு அணைக்கப்பட்டது. தீ விபத்து கட்டிட கட்டமைப்பை சேதப்படுத்தவில்லை என்றும்  மற்றும் யாரும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here