சுற்றுலா சென்ற பிரபல நடிகரின் மனைவி மரணம்

பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தனது உறவினர்களுடன் கடந்த வாரம் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்திருக்கிறார். நடிகர் விஜய் ராகவனும் சமீபத்தில் அவர்களுடன் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் ராகவனின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார். இரவு தூங்க சென்ற அவர் காலையில் எழுந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது மரணம் நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்பந்தனா அபூர்வா என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here