கோலாலம்பூர்:
மூவார், தாமான் பாகோ ஜெயாவில் உள்ள தனது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த 51 வயது நபர் ஒருவர், தற்போது மூவார் சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது சுயநினைவின்றி இருப்பதாகவும், அவரது உடலில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மூவார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஃபௌஸிஷாம் தார்விஸ் (51) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாகோ பல்கலைக்கழகத்தில் (Universiti Pagoh) துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.




















