நிதி முறைகேடு; செல்சி மீது விசாரணை

லண்டன், ஆகஸ்ட்டு 10: 

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டக் குழுவான செல்சி நிதி விதிமுறைகளை மீறியுள்ளதா? என்பது தொடர்பில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ரஷ்ய செல்வந்தரான ரோமன் அப்ராமொவிச் செல்சியின் உரிமையாளராக இருந்தபோது, அக்குழு நிதி விதிமுறைகளை மீறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் மாஸ்டர்ஸ் புதன்கிழமையன்று பிரிட்டனின் டைம்ஸ் நாளிதழிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்க செல்வந்தரான டாட் பொவெலி உள்ளிட்டோரின் தலைமையிலான முதலீட்டுக் குழுவிடம் அப்ராமொவிச், 2022ஆம் ஆண்டில் செல்சியை விற்றார்.

உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததையடுத்து, பிரிட்டனில் உள்ள அப்ராமொவிச்சின் சொத்துகளை அந்நாட்டு அரசாங்கம் முடக்கியதை தொடர்ந்து செல்சி விற்கப்பட்டது.

எனவே அப்ராமொவிச் செல்சி உரிமையாளராக இருந்தபோது, அக்குழுவில் இடம்பெற்ற பல பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை புதிய உரிமையாளர்கள் ஐரோப்பிய காற்பந்து ஒன்றியம் (யூயேஃபா), இங்கிலிஷ் பிரிமியர் லீக், இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தெரியப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here