சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி: மலேசிய அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணிக்கு சாம்பியன் பட்டம் நழுவியது. நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள மலேசியவும், 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன.

9ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஜூக்ராஜ் சிங் முதல் கோல் போட்டார். 14- ஆவது நிமிடத்தில் மலேசிய அணி வீரர் அஸ்ராய் அபுகமல் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

அத்துடன் தொடர்ந்து 2 கோல்கள் அடித்து மலேசிய அணி ஆதிக்கம் செலுத்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரஹிம் 18-ஆவது நிமிடத்திலும், முகமது அமினுதீன் 28-ஆவது நிமிடத்திலும் இந்த கோலை அடித்தனர். இதனால் முதல் பாதியில் மலேசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆதனை தொடர்ந்து 45-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இதனால் இந்திய அணி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

56-ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது. முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு மலேசிய அணி 5 முறை வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here