மடானி மருத்துவத் திட்டம் ஏழைகளுக்கு வரப்பிரசாதம்

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பி40 தரப்பினரின் உடல்நலம் பேணவும் முறையான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காகவும் மலேசிய ஒற்றுமை அரசாங்கம் சுகாதார அமைச்சின் வழி மடானி மருத்துவத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. சுகாதாரத்தைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் 2023 மே 5ஆம் தேதி இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

*​மடானி மருத்துவத் திட்டத்தின் முதல் கட்டம் முதல் பரீட்சார்த்த கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஜோகூர்பாரு, கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள கிள்ளான், பெட்டாலிங், உலுலங்காட், கோம்பாக், பேராக்கில் கிந்தா, பினாங்கில் தீமோர் லாவுட், சரவாக்கில் கூச்சிங், சபாவில் கோத்தா கினபாலு ஆகிய 10 மாவட்டங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றன.

* இரண்டாவது கட்டம் திரெங்கானுவில் உள்ள கோல நெருஸ், கோலத் திரெங்கானு, கெடாவில் உள்ள கோத்தா ஸ்டார், கோலமூடா ஆகிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் பரீட்சார்த்தத் திட்டம் 6 மாதங்களுக்கு நடத்தப்படும். வரும் 2023 டிசம்பர் 31ஆம் தேதி இத்திட்டம் நிறைவுபெறும்.

* இத்திட்டம் கிளாந்தானில் உள்ள கோத்தாபாரு, பாசீர் மாஸ், பகாங்கில் உள்ள குவாந்தான், மலாக்காவில் மலாக்கா தெங்கா, நெகிரி செம்பிலானில் சிரம்பான், பினாங்கில் செபெராங் பிறை தெங்கா, பெர்லிஸ் ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அதிகமான மக்கள் இந்த இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டும் என்பதுதான் ஒற்றுமை அரசாங்கத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மொத்தம் 21 மாவட்டங்களில் இந்த இலவச மருத்துவச் சிகிச்சைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

* மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ் அதன் குழுமத்தில் இடம்பெறுவதற்கு தனியார் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் அவர்களது கிளினிக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.


ProtectHealth di www.protechhealth.com.my/skimperubatanmadani என்ற வலைத்தளத் தில் தனியார் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் பதிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நோயாளிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் உதவித் தொகை நிறைவுபெறும் வகையில் சம்பந்தப்பட்ட நோயாளி இலவச சிகிச்சையைப் பெறலாம். ஒரு நோயாளி தனியார் கிளினிக்குகளுக்கு அடையாளக்கார்டை மட்டும் கொண்டு சென்றால் போது மானது.

1.கே: இந்த இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் விலக்கு வைக்கப்பட்டிருக்கும் தரப்பு யார்?

* ​2023 முதல்கட்ட ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தில் (எஸ்டிஆர்) ரொக்க உதவி பெற்று வரும் பி40 தரப்பினர் இந்தத் திட்டத்தில் இலவங் சிகிச்சையைப் பெறலாம். மூன்று பிரிவுகளாக நோயாளிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு குடும்பம், தனித்து வாழும் மூத்த பிரஜை, திருமணம் ஆகாதவர் ஆகியோர் தங்களது அடையாளக்கார்டை எடுத்துச் சென்று தனியார் கிளினிக்குகளில் பதிவு செய்து கொண்டால் இந்த இலவச சிகிச்சையைப் பெறுவதற்குரிய தகுதியைப் பெறுவர். இயல்பாகவே அவர்கள் தகுதி பெற்றிருப்பர்.

* ​இத்திட்டத்தின் கீழ் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளி தனியார் மருத்துவக் கிளினிக்குகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தனியார் கிளினிக் மடானி மருத்துவத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நோயாளி இலவசமாகவே அந்தச் சிகிச்சையைப் பெறலாம்.

* ​மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியாக உதவித் தொகை ஒதுக்கப்படுகிறது. குடும்பம் (அனைவரின் பெயரும் உள்நாட்டு வருமான வரி வாரிய ஆவணத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்). அவர்களுக்கு 250 ரிங்கிட் ஒதுக்கப்படும். தனித்து வாழும் மூத்த பிரஜைகளுக்கு 125 ரிங்கிட். திருமணம் ஆகாதவர்களுக்கு 75 ரிங்கிட்.

* ​இத்திட்டத்தின் பலன்கள் ஒரு தடவை மட்டுமே அல்லது பரீட்சார்த்த முறையில் திட்டம் அமலில் இருக்கும் வரை இலவங் சிகிச்சையைப் பெறலாம்.

* மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, மருந்துகள், நடைமுறைகள், தனியார் கிளினிக்குகள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

2. ​கே: மடானி மருத்துவத் திட்டத்தின் நோக்கம் என்ன?
* மடானி மருத்துவத் திட்டத்தின் நோக்கமானது பி40 தரப்பினரின் நலன்களையும் அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பது ஆகும். நகர்ப்புறங்களில் வாழ்கின்ற ஏழை மக்கள் கடுமையான நோய்களுக்குத் தங்களது வசிப்பிடங்களுக்குப் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கிளினிக்குகளில் இலவசமாக சிகிச்சைப் பெறுவர்.

* ​இது தவிர அரசாங்க – தனியார் மருத்துவத் துறைகள் இடையிலான ஒரு பரஸ்பர ஒத்துழைப்பை இத்திட்டம் வலுப்படுத்துகிறது. கடுமையான நோய்களுக்கு உட்பட்டிருக்கும் ஏழைகளுக்கு வெளிநோயாளி சிகிச்சையை வழங்குவதில் இந்த ஒத்துழைப்பு மிகப்பெரிய பலனைத் தருவதாக இருக்கும்.

3. கே: மடானி மருத்துவத் திட்டம் மக்களுக்கு உதவுமா?
* ​நகர்ப்புறங்களில் வாழும் பி40 மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அல்லது கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவது என்பது கடினமான ஒன்று. அவ்வகையில் இத்திட்டமானது தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள தனியார் கிளினிக்குகளில் இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வகை செய்கிறது.

* ​மடானி மருத்துவத் திட்டம் பி40 தரப்பு மக்களின் மருத்துவச் செலவுச் சுமையைக் குறைக்க உதவுகிறது.

* ​எஸ்டிஆர் ரொக்க உதவியைப் பெறுவோருக்கு நகர்ப்புறங்களில் வாழும் பி40 மக்களுக்கு தனியார் கிளினிக்குகள் மருத்துவச் சிகிச்சையை வழங்குவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கிறது. மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ் இதுவரை கிட்டத்தட்ட 750 தனியார் கிளினிக்குகள் பதிவு செய்து கொண்டுள்ளன.

* ​கூடுதல் நேர மருத்துவச் சேவையை தனியார் கிளினிக்குகள் வழங்குகின்றன. இந்த நேரத்திற்குள் போய்விட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. வசதிக்குட்பட்ட எந்த நேரத்திலும் அவர்கள் சிகிச்சை பெறலாம். இதற்கு இத்திட்டம் வகை செய்கிறது. மேலும் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரத்தையும் அது குறைக்கிறது.

4. ​கே: கடுமையான நோய் என்பது என்ன? அல்லது கடுமையான நோய்களுக்குட்பட்ட வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை என்ன?
* திடீரென ஏற்படக்கூடிய நோயாகும். கூர்மையான ஆயுதங்களால் விளைவிக்கப் படும் காயங்களும் அதில் உள்ளடங்கும்.
– காயங்கள், தீப்புண் காயங்கள்
– மூட்டுவலி
– வீக்கம்
– எலும்பு முறிவு
– ஆர்ட்ரிட்டிஸ், வாதம், நீரிழிவால் ஏற்படக்கூடிய சிக்கல்கள்

* கீழ்க்குறிப்பிட்ட நோய்களால் ஏற்படக்கூடிய வலி அறிகுறிகள்
– வீக்கம்
– அரிப்பால் ஏற்படும் சிவப்பு நிறத் திட்டுகள்
– எரிச்சல்
– மந்தம்
– மரத்துப் போவது
– உடல் பாகங்கள் செயலிழப்பு
– மயக்கம்

5. கே: கடுமையான நோய்களுக்கு வெளிநோயாளி சிகிச்சை
– சளி, காய்ச்சல்
– வாந்திபேதி
– தலைவலி
– சுளுக்கு

* ​வழக்கமாக ஊசிபோடுதல், மருத்துவப் பரிசோதனை, தொற்று அல்லாத நோய்க்கு அடுத்தடுத்த சிகிச்சை தாய்- சேய் தொடர் சிகிச்சை குடும்பக் கட்டுப்பாடு, புனர் வாழ்வுச் சேவை, மருத்துவரின் ஆலோசனை அன்றி மருந்து கேட்பது, உபரி சத்து மருந்து கேட்பது போன்றவை இந்தத் திட்டத்தில் இடம்பெறாது.

* 2023 ஜூன் 15ஆம் தேதி இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடும்பத்தினர் இந்த மடானி இலவங் சிகிச்சையைத் தனியார் கிளினிக்கு களில் பெற்றிருக்கின்றனர்.

6. ​கே: மடானி மருத்துவச் சிகிச்சையைப் பெறுவது எப்படி?
*https://protecthealth.com.my/skimperubatanmadani என்ற வலைத்தளத்தில் நோயாளி கள் தங்களது தகுதியைச் சரிபார்த்துக் கொள்ளலாம். அருகில் உள்ள தனியார் கிளினிக்குகளுக்குச் சென்று அடையாளக்கார்டைக் காட்டி தங்களது பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

* ​தகுதி பெற்றிருந்தால் வெளி நோயாளிகளாக இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

* ​ஒரு முறை சிகிச்சை பெற்றதும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் இருந்து அதற் கான செலவு கழிக்கப்படும்.

7. ​கே: மடானி இலவச மருத்துவச் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?

* ​மடானி மருத்துவச் சிகிச்சை முற்றிலும் இலவசமானதாகும். புகார்கள் இருந்தால் spm@protechealth.com.my என்ற மின் அஞ்சல் வழியும் அல்லது + 603-86872525 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here