போயிட்டியா மரியா பீவி? கதையை முடித்த மகன் – குடிக்க தண்ணீர் தந்த அப்பா

இஸ்லாமாபாத்: கொந்தளித்து போயிருக்கிறார்கள் பாகிஸ்தானிய மக்கள்.. மரியாவின் கொலைக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாக முன்னெடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது தோபா தேக் சிங் என்ற நகரம்.. இங்கு வசித்து வருபவர் அப்துல் சத்தார்… இவரது மகள் மரியா பீபி.. 22 வயதாகிறது.. மரியாவுக்கு முகமது பைசல் மற்றும் ஷெபாஸ் என்று இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள்.

வீடியோ கால் : கடந்த சில நாட்களாகவே, யாரோ ஒரு நபருடன் மரியா அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதனை மரியாவின் மூத்த தம்பி பைசல் கவனித்துவிட்டு, எச்சரித்திருக்கிறார். ஆனாலும், மரியா அடையாளம் தெரியாத அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இரவு படுக்கையறையில் மரியா இருந்தபோது, பைசல் வந்தார்.. அவருடன் மரியாவின் அப்பா, அம்மா, இன்னொரு சகோதரன் ஷெபாஸ் ஆகியோரும் மொத்தமாக திரண்டு, மரியாவின் பெட்ரூமுக்குள் நுழைந்துள்ளனர்… மகளின் படுக்கையில் அப்பா உட்கார்ந்து கொண்டார்.. அப்போது திடீரென மரியாவை சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தை நெரித்தார் பைசல்.

சலனம்: மரியாவோ வலியால் துடித்தார்.. ஆனால், படுக்கையில் உட்கார்ந்திருந்த அப்பாவோ, எதுவுமே சொல்லாமல், தன்னுடைய முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் வெளிக்காட்டாமல், அமைதியாக இதனை வேடிக்கை பார்த்து கொண்டேயிருந்தார்.. கொஞ்ச நேரத்தில் மரியாவின் உடல் அசைவற்று போனது.. மூச்சும் நின்றுவிட்டது.

சிறிது நேரம்கழித்து, பைசலிடம் வெளியே போகும்படி அப்பா சொன்னார்.. ஆனால், மரியாவின் உயிர் பிரிந்தபிறகும்கூட, வெறி தீராமல் தொடர்ந்து மரியாவின் கழுத்தையே இறுக்கமாக நெரித்துக்கொண்டேயிருந்தார் பைசல் . ஒருகட்டத்தில் மரியா உயிர் பிரிந்துவிட்டது என்பது உறுதியான பிறகுதான், கட்டில் மீது வந்து உட்கார்ந்தார் பைசல்..

ஆசுவாசம்: மகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கட்டிலில் உட்கார்ந்த பைசலுக்கு, அவருடைய அப்பா, தண்ணீர் கொண்டு வந்து தந்து குடிக்க சொன்னார்.. மகனையும் ஆசுவாசப்படுத்தினார்.. பைசலும் அந்த தண்ணீரை வாங்கி குடித்தார். இந்த சம்பவங்கள் அனைத்தையும், மரியாவின் இன்னொரு தம்பி ஷெபாஸ், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துவிட்டார். இந்த வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு, போலீஸாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.

கைது: இது குறித்து தோபா தேக் சிங் நகர போலீஸ் அதிகாரி அடா உல்லா சொல்லும்போது, “மரியா இயற்கையான முறையில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தரவில்லை. வீடியோவை பார்த்துவிட்டு, நாங்களாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்.. மரியாவின் சகோதரர்கள் பைசல், ஷெபாஸ், அவருடைய அப்பா அப்துல், ஆகியோரை கைது செய்திருக்கிறோம்…

வீடியோ எடுத்துள்ள ஷெபாஸூக்கு இந்த விவகாரத்தில் எந்தளவுக்கு தொடர்புள்ளது என்று விசாரணை நடைப்பெற்று வருகிறது.,. இது ஆணவ கொலை தான் என்பதற்கான சாட்சியங்கள் எல்லாமே எங்களிடம் உள்ளது.. வீடியோவில் ஷெபாஸின் மனைவியும் இருக்கிறார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கான காரணங்கள் குறித்து இன்னும் முழு விவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

ஆவேசம்: எனினும், மரியாவின் மரணம் பாகிஸ்தானை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கி எடுத்துள்ளது.. அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் குரல்களும் ஒலிக்க துவங்கியுள்ளன. மொத்த குடும்ப உறுப்பினர்களையும் தூக்கில் போடுங்க என்று கொந்தளித்து சொல்கிறார்கள் பொதுமக்கள்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here