எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினருக்கு ஆறுதல் கூற மருத்துவமனை வந்த பிரதமர்

கிள்ளான்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எல்மினா விமான விபத்தில் சிக்கிய  குடும்பத்தாரின் அடுத்த உறவினர்களை சந்திக்க தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) வந்தடைந்தார்.

மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் பிரதமரின் வருகையுடன் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா ஆகியோர் இருந்தனர். பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

N28JV பதிவு எண் கொண்ட ஆறு இருக்கைகள் கொண்ட பீச்கிராஃப்ட் மாடல் 390 (பிரீமியர் 1) நேற்று லங்காவியில் இருந்து சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தை நெருங்கும் போது எல்மினா, ஷா ஆலம் அருகே விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும், சாலையில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here