அடுக்குமாடியில் விழுந்து இறந்த தொழிலதிபர் லிம் குவான் எங் கடலுக்கடி சுரங்கப்பாதை ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியா?

பினாங்கு அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்த ஒரு முக்கிய தொழிலதிபர் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் கடலுக்கடி சுரங்கப்பாதை ஊழல் வழக்கில் முக்கிய  சாட்சியாக இருந்தவர் என்று ஆதாரங்கள் தெரிவிக்கிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஆதாரம் 53 வயதான நபரை ஒரு முறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. அவர் விசாரணைக் குழுவுக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளித்துள்ளார். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர் விருப்பத்துடன் ஒத்துழைத்தார். நில பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அவர் முக்கிய வழக்கு சாட்சிகளில் ஒருவராக இருந்தார் என்று அந்த ஆதாரம் எப்ஃஎம்டியிடம்  தெரிவித்தது.

ஆனால் தொழிலதிபரின் பெயரை போலீசார் இன்னும்  உறுதிப்படுத்தவில்லை. 2018 ஆம் ஆண்டில், தொழிலதிபர் MACC ஆல் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். ஊழல் விசாரணையில் அவர் முக்கிய சாட்சியாக இருந்தாலும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர் இன்னும் சாட்சிக்கு அழைக்கப்படவில்லை.

நிலத்தடி சுரங்கப்பாதை திட்டத்தின் லாபத்தில் 10%  கேட்டதாக அப்போதைய முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தியதாக லிம் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். மூன்று  சாலைகளை உள்ளடக்கிய RM6.3 பில்லியன் திட்டத்தை மேற்கொள்ள ஒரு மேம்பாட்டாளரை நியமிக்க RM3.3 மில்லியன்  பெற முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, அவர் இரண்டு நிறுவனங்களுக்கு 208.7 மில்லியன் மதிப்புள்ள அரசு நிலத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக, இன்று காலை கெலாவி சாலையில் உள்ள பலாஸ்ஸோ அடுக்கு மாடியில் இருந்து ஒருவர் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சோபியன் சாண்டோங், விசாரணை வரை எந்தக் கருத்தும் வெளியிட முடியாது என்று கூறினார். அந்த நபர் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here