சுதந்திர தினத்தை முன்னிட்டு GM KLANGஇன் பிரத்தியேக விற்பனை


கிள்ளான்
, ஆக. 18-

இவ்வாண்டு சுதந்திர தினம், மலேசிய தினக்கொண்டாட்டங்களை மேலும் விமரிசையாக்க GM KLANG மொத்த விற்பனை மையம் Malaysia, Rumah Kita! 2023 – Istimewa 66 எனும் விற்பனைப் பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்துள்ளது.

மலேசிய மடானி: நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் ஒற்றுமை முன்னெடுப்பு என்ற தேசியத் தினக் கோட்பாட்டிற்குஏற்றவாறு இந்த விற்பனைப் பிரச்சா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 2, 3ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தநிகழ்ச்சி நடைபெறும்.  பல இனமதங்க ளைச் சேர்ந்த அதன் வாடிக்கையாளர்களுக்கு பன்முகத்தன்மையும் ஒற்றுமை யையும் கோட்பாடாகக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் GM KLANG நிறுவனம் சுதந்திர மாதத்திற்கு மதிப்பளிக் கின்றது.

இது குறித்து பேசிய GM KLANG மொத்த விற்பனை மையத்தின் முத்திரை தொடர்புப் பிரிவு முதன்மை நிர்வாகி நோர் சுஹைடா, இவ்வாண்டு இந்தச் சிறப்பு நிகழ்ச்சி மாறுபட்டதாக அமைந்துள்ளது.

66ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்ப இதில் இடம்பெறும் ஒவ் வொரு நடவடிக்கைகளுக்கும் 66 பரிசுகளை வழங்குகின்றோம். அதில் குறிப்பாக Merdeka 66 Kapsul எனும் பிரத்தியேக அங்கம் இடம்பெற்றுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 3, 4ஆம் தேதிகளில் 2 ரசீது இணைப்புகள் வாயிலாக 250 ரிங்கிட்டிற்கும் மேற்பட்டவிலையில் பொருட்களை வாங்கி இருந் தால் அவர்களுக்குக்கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

இந்நிலையில் GM KLANG விற்பனை மையத்திற்குவரும் வாடிக்கையாளர்கள் நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்வதற்கு இந்தக் குறிப் பிட்ட இருநாட்களில் மலேசியாவில் உள்ள பல இனத்தவர்களின் பாரம்பரிய நடனம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்.

தொடர்ந்து சிலாங்கூர் மாநில மலாய்க் கலாச்சா, பாரம்பரிய வாரியத்தின் அடாட் டான் வாரிஸ்சித்திரக்கதையின் 2 சிறப்பு கதாபாத்திரங்களும் (ஜினா, மாட்) மாஸ்கோட் மக்களை மகிழ்விப்பர்.

இந்தப் பிரத்தியேகப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள், நட வடிக்கைகள் அனைத்தும் GM KLANG வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் ஒன்றாக இணைந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் இந்த இரு நாட்களில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப் படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here