பெரும்பாலான மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 20:

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கிளாந்தான் மாநிலம் தவிர, கெடாவில் பாடாங் தெராப், சிக் மற்றும் பாலிங் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (MET மலேசியா) இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பேராக்கில் லாரூட், உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம் ஆகிய பகுதிகள் ; திரெங்கானுவில் பெசூட், செத்தியூ, கோலா நெராஸ், உலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மாராங் மற்றும் டுங்கூன் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் ; அதே போல் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், பெந்தோங், தெமெர்லோ, மாரான், குவாந்தான், பெரா மற்றும் பஹாங்கில் பெக்கான் ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.

“அதேபோல், சிலாங்கூரில் உள்ள கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் போன்ற பகுதிகளுக்கும் இந்த வானிலை பொருந்தும்; நெகிரி செம்பிலானில் ஜெலேபு மற்றும் சிரம்பானை உள்ளடக்கிய இடங்களும்; ஜோகூரின் குளுவாங், மெர்சிங், பொந்தியான் மற்றும் கூலாய் ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் சரவாக்கில் உள்ள கூச்சிங், சிபு, முக்கா, காபிட், பிந்துலு மற்றும் லிம்பாங் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வானிலை எச்சரிக்கை பொருந்தும்; அத்துடன் சபாவில் சிபிதாங், தெனோம், பியூஃபோர்ட், கெனிங்காவ் மற்றும் தம்புநான்; மேற்கு கடற்கரை, சண்டாக்கான் (தெலுபிட் மற்றும் பெலூரான்), மற்றும் கூடாட் (கோத்தா மருது மற்றும் பிடாஸ்) ” ஆகிய இடங்களும் இந்த வாணி;லையை எதிர்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here