தேச நிந்தனை வழக்கு; கெடா மந்திரி பெசார் விடுவிப்பு

கோலாலம்பூர்:

3R எனப்படும் இன, மத மற்றும் அரச குடும்பத்திற்கு எதிரான வழக்கிலிருந்து கெடா மந்திரி பெசார் இன்று விடுவிக்கப்பட்டார்.

இதில் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம், தேச நிந்தனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து கெடா மாநில மந்திரி பெசார் சனுசி நோர் விடுவிக்கப்படுவதாக ஷா ஆலம் உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது.

குறித்த வழக்கில் சனுசிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்துள்ளதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் ஜைனுடின் குறித்த தீர்ப்பை விதித்தார்.

கடந்த ஆண்டு சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவுக்கு எதிராக தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்ததாக கெடா மாநில மந்திரி பெசார் சனுசி மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here