நாய் துரத்தியதால் வீட்டின் சுவரில் மோதி 14 வயது சிறுவன் காயம்

ஈப்போ: சைக்கிளில் செல்லும்போது நாய் துரத்தியதால் வீட்டின் சுவரில் மோதி 14 வயது சிறுவன் காயம் அடைந்தான். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 11.30 மணியளவில் Taman Rapat Permai இல் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, Kg Rapat காவல் நிலையத்தில் காவல் துறை புகார் அளிக்கப்பட்டதாக ஈப்போ OCPD உதவி ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு தோள்பட்டை எலும்பு உடைந்ததால் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்றும்  தனது மகனுக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அவரது மார்புக்கு அருகில் காயங்கள் ஏற்பட்டதை அடுத்து புகார் அளித்ததாக பாதிக்கப்பட்டவரின் 40 வயதான தந்தை கூறினார். அச்சிறுவன் வீட்டுக்குத் திரும்பி சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு நாய் துரத்தியது. அதன் விளைவாக ஒரு வீட்டின் சுவரில் மோதியதாக பாதிக்கப்பட்டவர் தனது தந்தையிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சைக்கிளில் இருந்து விழுந்ததும், நாய் ஓடி விட்டது என்று அவர் மேலும் கூறினார். அந்த நாய் தங்களுடையது என்பதை வீட்டின் உரிமையாளர் மறுத்ததாக ஏசிபி யஹாயா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஈப்போ மாநகர மன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here