கோலாலம்பூர்: நிலவின் தென் துருவப் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இந்திய விண்கலமான சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வியாழன் (ஆகஸ்ட் 24) அன்று ஒரு முகநூல் பதிவில், மலேசியப் பிரதமர், இது ஆசியாவிற்கும் கிடைத்த வெற்றி என்று விவரித்தார்.

இந்தியா இப்போது சந்திரனை வென்றுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த சாதனையில் மலேசியாவும் பெருமை கொள்கிறது, இது தெளிவாக ‘ஆசிய நூற்றாண்டு’. வாழ்த்துகள், இந்தியா!” என்று பதிவிட்டுள்ளார். நிலவின் தென் துருவப் பகுதியைத் தொட்ட முதல் நாடு என்ற சாதனையைப் படைத்தது இந்தியா. சந்திரயான்-3 சந்திரனுக்கு ஜூலை 14 அன்று ஏவப்பட்டது.









