CVSKL & AIRASIA RIDE இடையே ஆக்கப்பூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாலம்பூர், –

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்ற மருத்துவ மையமான Cardiac Vascular Sentral Kuala Lumpur (CVSKL) தரப்பு ஆசியான் ரீதியில் ஹைலிங்- போக்குவரத்துத் துறையில் முதன்மையாக விளங்கும் airasia ride குழுமத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, வழக்கத்தைவிட இன்னும் எளிய முறையில் நோயாளிகள் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்த வழிவகுத்துத் தரப்படுகிறது. அதிலும் இந்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளுக்கு எளிய பயணத்தை ஏற்படுத்தித் தரவும் இந்தப் புரிந்துணர்வு வழிவகுக்குகின்றது.

இது குறித்து பேசிய CVSKL குழும தலைமைச் செயல் அதிகாரி டான் எங் கி, இலகுவான வழியில் மருத்துவமனையை அடைவதற்கான அவசியத்தை எங்களால் உணர முடிகிறது. அதுவும் இருதய சம்பந்தப்பட்ட நோய் உடையவர்களுக்கு இது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நோயாளிகள் எந்தவொரு போக்குவரத்துத் தடையுமின்றி தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும். மேலும் airasiasuperapp செயலியைப் பயன்படுத்துவதன் வழி முதன்முறையாக airasia ride பயன்படுத்தி CVSKL மையத்திற்கு வரும் நோயாளிகள் 5 ரிங்கிட் கழிவைப் பெறலாம் என்றார் அவர்.

தொடர்ந்து இந்தக் கூட்டமைப்பின் வாயிலாக எல்லையில்லா ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஏற்படுத்தித்தர நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று airasia ride குழுமத்தின் பிராந்திய தனைமைச் செயல் அதிகாரி லிம் சியூ ஷான் கருத்துரைத்தார். மேல் விவரங்களுக்கு 603-22767002 என்ற எண்ணில் வழக்கமான பணி நேரத்தில் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்புவதோடு அழைப்பும் விடுக்கலாம்.

இது தவிர info@cvskl.com என்ற மின்னஞ்சலுக்கும் தகவல் அனுப்பலாம்.

-LK.Raj- Reporter MO HQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here