சவுதி அரேபியாவில் 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை!

ரியாத்;

சவுதி அரேபியாவின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி சரியாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் கல்வியாண்டுகளில் நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் எந்த காரணமும் இன்றி 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அது குறித்து உடனடியாக பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 பேர் படுகாயம் பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வழக்கை கோர்ட்டுக்கு அனுப்புவார்கள் என்றும், கோர்ட்டில் பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here