அனைத்துலக சட்டங்கள், பாலஸ்தீனிய உரிமைகளை மீறுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் -மலேசியா

கோலாலம்பூர்:

ஸ்ரேல் அனைத்துலக சட்டங்களை மீறுவதையும், பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளை மீறுவதையும் முதலில் நிறுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நாவின் பொது விசாரணையின் போது, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தோக்மாட், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை (OPT) விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

“மூன்றாவதாக, பாலஸ்தீனியர்களுக்கான சுயநிர்ணய உரிமையை மீறுவதால் ஏற்படும் அனைத்து பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கும் இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

கடந்த திங்களன்று தொடங்கிய பொது விசாரணையின் போது பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் சட்டரீதியான விளைவுகள் குறித்து 50 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் வாதங்களை ஐ.நாவின் உச்ச நிதிமன்றத்தில் முன்வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here