சந்திரனில் இருந்து கொண்டு.. சூரியனை துரத்தும் பிரக்யான்! நிலவில் நடக்கும் வினோதம்

சென்னை: நிலவில் களமிறங்கி நகர்ந்து வரும் பிரக்யான் ரோவர் நிலவில் இருந்து கொண்டே சூரியனை துரத்தி வருகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா மேற்கொண்டு படியுங்கள்…நிலவில் பிரக்யான் ரோவர் தற்போது வெற்றிகரமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த பிரக்யான் ரோவரின் 3 பக்கத்தில் சோலார் பேனல் இல்லை: இந்த பிரக்யான் ரோவரில் ஒரு பக்கம் மட்டுமே சோலார் பேனல் உள்ளது. 3 பக்கங்களில் ஆராய்ச்சி கருவிகள் உள்ளன. ஆனால் விக்ரம் லேண்டரில் 4 பக்கங்களில் 3ல் சோலார் பேனல் உள்ளது.

இதனால் விக்ரம் லேண்டர் இருந்த இடத்தில் இருந்தே சூரியனின் கதிர்களை பெற முடியும். ஆனால் பிரக்யான் ரோவர் அப்படி இல்லை. தினமும் சூரியன் நகர்வதற்கு ஏற்றபடி நகர வேண்டும்.

துரத்தப்படும் சூரியன்: நிலவின் தென் பகுதியில் தினமும் சூரியன் 12 டிகிரி நகர்கிறது. 14 நாட்கள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 14வது நாளின் முடிவில் 0 சதவிகிதம் மட்டுமே பிரக்யான் ரோவரில் சூரிய ஒளி படும்.

இதனால் 14 நாட்கள் முடிந்த பின் பிரக்யான் ரோவர் செயல் இழக்கும். ஏனென்றால் அதன் சோலார் பேனலுக்கு. இந்த நிலையில்தான் சோலார் பேனலுக்கு இப்போது முறையாக சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று சந்திரனில் இருந்து கொண்டு சூரியனை பிரக்யான் ரோவர் துரத்துகிறது.

தகவல் பரிமாற்றம் எப்படி?: இந்த ரோவர் முழுக்க முழுக்க தன்னிச்சையாக இயங்கவில்லை. இதற்கு சில ஆர்டர்கள் பூமியில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை மூலம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் இதற்காக பூமியில் இருந்து நிலவில் பிரக்யான் செல்ல வேண்டிய பாதையை திட்டமிடுவோம். ஒவ்வொரு 5 மணி நேரமும் இது கடக்க வேண்டிய பாதையை நாங்கள் கணக்கிடுவோம்.

குழிகள் குறைவாக உள்ள பகுதிகள், எளிதாக செல்ல வேண்டிய பகுதிகளை கணக்கிடுவோம்., அதில் இருக்கும் கேமராக்கள் உதவியுடன் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கான பாதையை கணக்கிட்டு மேப் ஒன்றை உருவாக்குவோம். அதை பின்னர் பிரக்யான் ரோவரிடம் அனுப்புவோம். பின்னர் அந்த பாதையில் பிரக்யான் ரோவர் இயங்கும். இதற்காக 24 மணி நேரமும் ஆட்கள் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர்.

நகர்கிறது: இதற்கான ஆர்டர் பூமியில் இருந்து விக்ரம் லேண்டருக்கு செல்லும். விக்ரம் லேண்டரில் இருந்து அதன்பின் நேரடியாக ரோவருக்கு செல்லும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் கொஞ்சம் தாமதம் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. சந்திரனை இந்தியா அகப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சந்திரயான் 2 திட்டம் பாதி தோல்வி அடைந்த நிலையில் சுணங்கி போய் இருந்த இஸ்ரோ கடுமையான உழைப்பிற்கு பின் சந்திரயான் 3 திட்டத்தை முழு வெற்றியாக்கி சாதனை படைத்து உள்ளது.

நிலவிற்கு விக்ரம் லேண்டர், பிரக்யான் லேண்டர் இரண்டையும் வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அதோடு நிற்காமல் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் மனித பொருள் , லேண்டர், ரோவர் என்ற சாதனையையும் இந்தியா தன் வசமாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here