சிறப்பு ‘மலேசியா மெர்டேக்கா’ பதிவு எண்கள் ஏலம் விடப்படும்

புத்ராஜெயா: சாலைப் போக்குவரத்துத் துறையானது சிறப்புப் பதிவு எண்ணுக்கான முன்பதிவு டெண்டர்களை M என்ற முன்னொட்டு மற்றும் பின்னொட்டுடன் திறக்கும். M____M தொடர் 66ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் மலேசியா மெர்டேகாவை குறிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

ஏலம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு  செப்டம்பர் 4 ஆம் தேதி முடிவடைகிறது.  VIP எண்களுக்கான குறைந்தபட்ச ஏலம் RM20,000 இலிருந்து தொடங்குகிறது. கவர்ச்சிகரமான எண்களுக்கு RM3,000. பிரபலமான எண்களுக்கு RM800 மற்றும் சாதாரண எண்களுக்கு RM300.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here