இங்கிலாந்தில் 100க்கு மேற்பட்ட பள்ளிகளை மூட உத்தரவு

லண்டன்:

ங்கிலாந்து முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற கான்கிரீட்டைப் பயன்படுத்தி அக்கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது அதற்குக் காரணம்.

இங்கிலாந்தில் பெரும்பாலான மாணவர்களுக்குப் புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கும் நேரத்தில், கல்வி அமைச்சின் உத்தரவு வெளியாகியிருக்கிறது.

எடை அதிகமில்லாத ‘RACC’ எனும் கான்கிரீட் வகையைப் பயன்படுத்தி அக்கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 1950ஆம் ஆண்டு முதல் 1990களின் நடுப்பகுதி வரை கட்டப்பட்ட அக்கட்டடங்கள் இடிந்து விழும் சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதனால் அத்தகைய கட்டடங்களை மூடும்படி மொத்தம் 104 பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இதுகுறித்த கவலைகளைப் பதிவு செய்திருப்பதாகவும் எந்நேரத்திலும் பள்ளியிலிருப்போரைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்பதால் தயார்நிலையில் இருக்கும்படி அப்பள்ளிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பள்ளிகளில், தனிப்பட்ட முறையிலான தீர்வு காண்பதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here