கேரளா ஐஎஸ் அமைப்பின் தலைவர் சென்னையில் வைத்து கைது

சென்னை:

திருச்சூரை தளமாகக்கொண்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது என்பவரை தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA ) சென்னையில் புதன்கிழமை (செப்.6) கைது செய்துள்ளது.

நபிலிடமிருந்து பல முக்கிய ஆவணங்களும் மின்னிலக்கப் பயன்பாட்டுக்கான கருவிகளும் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது போன்றவை தெரிய வந்துள்ளது.

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சையது நபி அகமட் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மாறிமாறி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் நேப்பாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது NIA அதிகாரிகள் சென்னையில் வைத்து நபிலைக் கைது செய்துள்ளனர்.

ஜூலை மாதம் முதல் விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்றாவது சந்தேக நபரான சையத் நபீல், குற்றவியல் ஆவணங்கள், மின்னியல் சாதனங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் அருகே மறைவிடத்தில் இருந்து அஷ்ரப் என்கிற ஆஷிப் என்பவரை NIA கண்காணித்து கைது செய்தது.

திருச்சூரை தளமாகக்கொண்ட ஐஎஸ்ஐஎஸ் பிரிவினர் கேரளாவில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளை முடுக்கிவிட நிதி திரட்டியதாகவும், கொள்ளைச் சம்பவங்கள் உட்பட பல சட்டவிரோத செயல்களைச் செய்து வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here