சிங்கப்பூர் அதிபராகும் தர்மன் சண்முகரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரின் அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக சிங்கப்பூரில் அண்மையில் தேர்தல் நடந்தது . இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதாகும் தர்மன் சண்முகரத்னம் , சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங் (76), NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் (75) ஆகியோர் போட்டியிட்டனர்.

இலங்கை  தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் தர்மன் சண்முகரத்தினத்தின் பின்னணி குறித்து பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம். தர்மன் சண்முகரத்தினத்தின் நிகர சொத்து மதிப்பு தோராயமாக 67 மில்லியன் டாலர் ஆக இருக்கும் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் 554 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பார் என்று மதிப்பிடுகின்றன அந்த நாட்டு ஊடகங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here