மலாக்காவில் உதயமாகி உள்ளது ஜஸ்வித்தா Cash & Carry

ருமா பங்சா பிகேஎன்எம் மலாக்கா, ஆயேர்குரோவில் இன்று திறப்பு விழா கண்டுள்ளது ஜஸ்வித்தா Cash & Carry.

மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனைக்கு உள்ளது தமிழ் நாட்டிலிருந்து பிரத்தியேகமாக தரவிக்கப்பட்டுள்ள பல வகையான பூக்கள், ‘மல்லிகை , முல்லை, கதம்பம், அரலி , தாமரை, செம்மங்கி, பன்னீர் ரோஜா , உற்பட பல வர்ணங்களிலான ரோஜாப்பூ வகைகள் இங்கு விற்பனை உள்ளது.

வாடிக்கையாளர்களின் பூஜைக்கு தேவையான மலர் மாலைகள் , திருமணம் மற்றும் இதர விஷேசங்களுக்கு தேவையான மாலைகளை மிக நேர்த்தியான முறையிலும் ஞாயமான விலையிலும் விற்பனை செய்ய தயார உள்ளதாக அதன் உரிமையாளர் ம. குமார் கூறினார்.

இத்தகைய பூக்கள் மலாக்காவில் கிடைப்பது சிரமம் , கோலாலம்பூர் அல்லது ஜோகூர் மாநிலங்களுக்கு சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை இனிமேல் ஏற்படாது. தனது கடையில் அனைத்து வகை பூக்களும் உள்ளன. ஆலய திருவிழாக்கள் திருமண வைபங்களுக்கு அதிகமான பூக்களை மொத்தமாக விற்பனை செய்யவும் தன்னிடம் மோதுமான பூக்கள் உள்ளது என்றார். சுற்று வட்டார மக்கள் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் தன்னை அணுகி தனது பொருட்களை வாங்கி ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் செய்து வரும் முக்கியமான தொழிலில் பூஜைப் பொருட்கள், பூ விற்பனை சவால் மிக்க ஒரு வணிகமாக தற்பொழுது விளங்கி வருகின்றது. மேலும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் இத்தகைய பூக்கள் நமது நாட்டில் கிடைப்பது மிகவும் அரிது. அதனை நமது உள்ளங்கையிலே கொண்டு வந்து விட்டார் துடிமிக்க இளைஞரான குமார்.

மேலும் ஊர் நெல்லிக்காய், மாதுளம், சிறிய கிழங்குகள், முறுங்கை உற்பட மஞ்சள் எழும்பிச்சை கனிகளும் இவரது கடையில் விற்பனைக்கு உள்ளது.

சவால் மிக்க இத்தொழிலில் கால் பதித்து உள்ள குமாருக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களை தெரிவித்துக் கொள்வதாக கடை திறப்பு விழாவிற்கான சிறப்பு பூஜையை நடத்தி கொடுத்த நெகிரி செம்பிலான் , பஹாவ் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய தலைமைச் சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ பட்டு ரமணி குருக்கள் கூறினார்.

திறப்பு விழாவில் மலாக்கா மாநில ஆளுநர் துன் ஸ்ரீ செத்யா அலி முகமட் ருஸ்தாம் அவர்களின் புதழ்வன் டத்தோ ரிட்வான் முகமட் அலி ருஸ்தாம், ஆயேர்குரோ சட்ட மன்ற உறுப்பினர் கெர்க் , பிரமுகர்கள் உறவினர்கள் ,மற்றும் நண்பர்கள் திரளாக கலந்துக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here