அரசு ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை

தானா மேரா:

ருவருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் 46 வயது ஆண் ஒருவர் அரசு ஊழியர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள ஒரு துயர சம்பவம் நடந்தேறி உள்ளது. 

நேற்று காலை 11 மணியளவில் மஞ்சாங் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஜாலான் லாமா பாசீர் பூத்தே -மஞ்சாங்கிலுள்ள ஒரு உணவகத்தில் இருவரும் சண்டையில் ஈடுபட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முஹமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இந்த சண்டையின் விளைவாக 51 வயதுடைய அரச உத்தியோகத்தருக்கு முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விலா எலும்புகள் உடைந்துள்ளதாகவும் சந்தேக நபருக்கு இரு கைகளிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

சண்டையில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் காயமடைந்தவருக்கு மஞ்சாங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்றும்,  இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here