கூச்சிங், ஸ்ரீ அமான், செரியான் ஆகிய இடங்களில் காற்று மாசடைவு

கூச்சிங்:

ரவாக்கின் கூச்சிங், ஸ்ரீ அமான் மற்றும் செரியான் ஆகிய மூன்று இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டை பதிவு செய்துள்ளன என்று மலேசியாவின் காற்று மாசுக் குறியீடு (APIMS) இணையதளத்தில் மணிநேர அளவீடுகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஸ்ரீ அமான் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தை பதிவு செய்தது. இது API அளவில் 154 ஆக இருந்தது, அதைத் தொடர்ந்து கூச்சிங் (API 134) மற்றும் செரியான் (API 124) ஆகவும் உள்ளது.

இந்நிலையில் சரவாக்கின் மற்ற பகுதிகள் மிதமான API அளவீடுகளை பதிவு செய்தன.

APIMS இணையதளத்தின்படி, ஆரோக்கியமற்ற API நிலை 101 முதல் 200 வரையிலான அளவீடுகள் பதிவானால். இது இதயம் மற்றும் நுரையீரல் சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுக்கு மோசமான உடல்நலக்குறைவை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here