ஜோகூர் இடைத்தேர்தல்: 28 போலீஸ் புகார்கள் பதிவு

ஜோகூர் பாரு:

பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சார காலம் தொடங்கிய ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் இன்று வரை, மொத்தம் 28 காவல்துறை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

அவற்றில் “3R (இனம், மதம், ஆட்சியாளர்கள் ) குற்றங்கள் தொடர்பான 4 புகார்களை புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (USJT) விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இரண்டு புகார்கள் கொடிகள் மற்றும் விளம்பர பலகை சுவரொட்டிகள் நாசப்படுத்தப்பட்டது தொடர்பில் மணிலா காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் இன்று தம்போயில் உள்ள மரைன் போலீஸ் படை (PPM) பிராந்தியம் II தலைமையகத்தில் ஆரம்ப வாக்குப்பதிவு செயல்முறையை ஆய்வு செய்த பின்னர் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here