பள்ளியில் சூதாட்டம்? 8 வயது மகளின் பள்ளிப் பையில்…?

கோலாலம்பூர்:

னது 8 வயது மகளின் பள்ளிப் பையில் அதிகப்படியான பணத்தை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஒரு தாய்.

“என் மகள் சுற்றிப் பார்க்க ஒரு புத்தகக் கடைக்குச் சென்றாள். திடீரென்று, அவள் RM899 மதிப்புள்ள ஒரு பள்ளி பையை எடுத்து, அதை வாங்க ஆர்வமாக இருந்தாள். தனது வகுப்புத் தோழிகள் அனைவருக்கும் அதே மாதிரியான பையை வைத்திருப்பதாகவும் கூறினாள்.

“பையின் விலையை பார்த்து உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், நான் என் மகளிடம் கடையிலுள்ள வேறு பொருட்களை வாங்குமாறு கூறினேன்” என்றார் சிறுமியின் தாயார்.

ஆனால் உடனே தனது மகள் , ‘தனது பள்ளிப் பையை விரைவாகத் திறந்து 1,550 ரிங்கிட் தன்னிடம் இருப்பதாக கூறினாள்’ என்று அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

ஒரு அனைத்துலக பள்ளியில் படிக்கும் குறித்த சிறுமிக்கு, தான் வாராந்திரம் செலவுக்காக 50 ரிங்கிட் கொடுப்பது வழக்கம் என்றும், ஆனால் திடீரென மகள் பெரிய தொகையை வைத்திருந்து தன்னைக் முதலில் மகிழ்வித்ததாகவும் கூறினார்.

முதலில் மகளுக்கு கணவர் ஏதேனும் பணம் கொடுத்தாரா என்று அவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துள்ளார். ஆனால் மக்களிடமிருந்து வந்த பதில் திகிலூட்டும் வகையில் இருந்தது.

ஆம். எனது மகள் தன் பள்ளி நண்பர்களுடன் சூதாடுவாள் என்றும், அப்படித்தான் அவள் பணத்தைக் சேர்த்திருக்கிறாள் என்றும் அவர் கூறினார்.

இதை எண்ணி “மகிழ்ச்சியாக இருப்பதா அல்லது கவலைப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று தாய் வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் சூதாட்டத்தில் மகளின் திறமையைப் பாராட்டினர் மற்றும் அதை வளர்க்க அவரது தாயை ஊக்கப்படுத்தினர், ஆனால் பெரும்பாலானோர் அத்தகைய தீமைகளிலிருந்து மகளை விலக்கி வைக்குமாறு தாய்க்கு அறிவுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here