பூலாய் இடைத்தேர்தல்: 927 காவல்துறை உறுப்பினர்கள், அதிகாரிகள் முன்கூட்டியே வாக்களிப்பு

ஜோகூர் பாரு:

பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு (பிஆர்கே) முன்கூட்டியே வாக்களிக்கும் நாளன்று காவல்துறை அதிகாரிகளும் மற்ற உறுப்பினர்களும் உள்ளடங்கிய 927 வாக்காளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர். 

தேர்தல் ஆணையத்தின் (SPR) தரவுகளின்படி, கெம்பாஸ் காவல் நிலையத்தின் செயல்பாட்டு அறையின் ஆரம்ப வாக்களிப்பு மையத்தில் 46 பேர் வாக்களிப்பு செலுத்தும் வேளையில், 881 பேர் கடற்படை போலீஸ் படைத் தலைமையகமான (பிபிஎம்) பிராந்தியம் இரண்டில் உள்ள டேவான் நுசந்தாராவில் வாக்களிப்பார்கள். 

இவ்விரண்டு ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களும் ஒரே நேரத்தில் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது, ஆனால் கெம்பாஸ் காவல் நிலையத்தில் வாக்களிக்கும் நேரம் மதியம் 12 மணி வரை மட்டுமே இருக்கும்.

மேலும், பிபிஎம் பிராந்தியம் இரண்டு தலைமையகத்தில் உள்ள ஆரம்ப வாக்குப்பதிவு மையம் மாலை 5 மணிக்கு மூடப்படும்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய பிரச்சாரக் காலம் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைந்தது. இவ்விரண்டு இடங்களையும் வாக்களிப்பு மையமாகவும் சனிக்கிழமை வாக்களிக்கும் நாளாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here