தற்கொலைக்கு முயன்ற பெண் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டார்

கோத்த கினபாலு சண்டகனில் சனிக்கிழமை (செப்டம்பர் 9) காலை அடுக்குமாடி குடியிருப்பின், ஐந்தாவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர். இதனால்  தற்கொலையில் இருந்து 22 வயதான அப்பெண் காப்பாற்றப்பட்டார்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஹம்சா இஸ்னுர்தினி கூறுகையில், காலை 9.39 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக அபார்ட்மென்ட் யூனிட்டிற்குத் திரும்பப் பெறுவதற்கு, தீயணைப்பு வீரர்கள் அப்சீலிங் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், பின்னர் அவர் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஹம்சா கூறினார்.

காலை 10.50 மணிக்கு மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்கள் Befrienders KLஐ 03-7956 8145 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது பினாங்கில் 04-281 5161/1108 அல்லது ஈப்போவில் 05-547 7933/7955, 08- 825 5788 இல் கோத்த கினாபாலு, அல்லது மின்னஞ்சல் [email protected]. மூலம் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here