தேசிய தினம், மலேசிய தினம் வித்தியாசம் என்ன ?

தேசிய தினம் என்பது மலேசியா பிரிட்டிஸ்காரர்களிடமிருந்து சுதந்திரமடைந்த நாள். எங்களை நாங்களே ஆட்சிசெய்வதற்கு முழு அதிகாரத்தை பெற்ற நாளாகும். ஆகஸ்ட்டு 31ஆம் தேதி தேசிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வாறிருக்க மலேசிய கூட்டமைப்பு உருவானதை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று, நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட அளவில் மலேசியா தினம் கொண்டாடப்பட வேண்டும்.

மலேசியா தினக் கொண்டாட்டம் மலேசியர்களிடையே வலியுறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது நாட்டின் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும் என அனைத்துலக விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் வரலாற்று நிகழ்ச்சித் தலைவர், டாக்டர் சுஃபியன் மன்சோர் கூறுகிறார். 

மலேசியா தினக் கொண்டாட்டங்கள் வழி நாட்டின் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் சுதந்திரமானது  மலாயாவுக்கு மட்டுமல்லாமல், சபாவிற்கும் சரவாக்கிற்கும் உரியது என்பதை  மக்கள் உணர முடியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய தினம் ஆகஸ்ட் 31ஆம் தேதியும் மலேசியா தினம்  செப்டம்பர் 16ஆம் தேதியும் என இரண்டு வெவ்வேறு தேதிகள் இருப்பதால், மலேசியா தினம் என்றால் என்ன என்பது பலருக்கு இன்னும் புரியவில்லை என்று சுஃபியன் கூறினார்.

எனவே, அடுத்த தேசிய மாத கொண்டாட்டம் மலேசியா உருவாவதற்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை முன்னிலைப்படுத்த வேண்டும்.

எனவே, மலேசியா தினம் மற்றும் தேசிய தினம் பற்றிய சரியான புரிதல் பள்ளியிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here