நெகிரி செம்பிலானுக்குச் சொந்த அரிசி ஆலைகள் தேவை என்கிறார் ஜலாலுதீன்

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் உள்ளுர் அரிசி பற்றாக்குறையைச் சமாளிக்க அரிசி ஆலைகள் அமைக்க வேண்டும் என்று மாநில விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

கோலாபிலா, ஜெலேபு, ஜெம்போல் போன்ற மாவட்டங்களிலும், கெமாஸ் பகுதியிலும் நெல் பயிரிடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முடுக்கிவிட வேண்டும் என்றார் அவர்.

“அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமான உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைக் குறிப்பாக அரிசி மற்றும் சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான உற்பத்தி ஆலை நிறுவுவது தொடர்பிலும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார் அவர்.

பண்டாரில் 2023 ஃபிட் மலேசியா சுற்றுப்பயணத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவில் நிருபர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை உற்பத்தி செய்ய அரிசி ஆலைகளின் தேவையை மாநில அரசு கருதுவதைத் தொடர்ந்து, எங்களிடம் போதுமான உணவு இருப்பு இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

உணவு வழங்கல் பிரச்சினைக்கான ஆரம்ப நடவடிக்கையாக, துறைகள் மற்றும் ஏஜென்சிகளின் ஈடுபாட்டுடன் மாநிலத்திற்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த மாஸ்டர் திட்டத்தை தனது குழு தாக்கல் செய்யும் என்று மூத்த நிர்வாகக் கவுன்சிலர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here