தஹ்ஃபிஸ் மைய விபத்தில் 23 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளியின் தண்டனையை நிலைநிறுத்தியது மேல்முறையீட்டு நீதிமன்றம்

புத்ராஜெயா: 2017 ஆம் ஆண்டு தாருல் குர்ஆன் இத்திஃபாகியா தஹ்ஃபிஸ் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு எதிரான சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் டத்தோ அபு பக்கர் ஜெய்ஸ், டத்தோ சே முகமட் ருசிமா கசாலி மற்றும் டத்தோ சீ மீ சுன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு இன்று ஒருமனதாக தீர்ப்பளித்தது.

ஆகஸ்ட் 17, 2020 அன்று, தீ விபத்து தொடர்பாக 23 பேரைக் கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், ஒரு சிறார் சிறுவனை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இளம் வயதினரின் தடுப்புக்காவலின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாமன்னரின் விருப்பத்தைப் பொறுத்து அவ்வப்போது தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. சமயகுடியிருப்பு பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் சிக்கி 21 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here